பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்: சமீபத்திய தகவலொன்று
பிரித்தானியாவில் இலங்கைப் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கையரான ஆண், தான் அந்தப் பெண்ணை கொலை செய்யவில்லை என மறுத்துள்ளார்.
படுகாயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட இலங்கைப் பெண்
ஆகத்து மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை 7.50 மணியளவில், வேல்ஸ் நாட்டின் தலைநகரான Cardiffஇலுள்ள South Morgan Place என்னுமிடத்தில், பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு பொலிசார் விரைந்துள்ளனர்.
அங்கு இரண்டு கார்களுக்கிடையில், கத்திக்குத்துக் காயங்களுடன் பெண்ணொருவர் கண்டெடுக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவ உதவிக்குழுவினர் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
யார் அவர்?
அவர் இலங்கையைச் சேர்ந்த நிரோதா என்னும் Niwunhellage Dona Nirodha Kalapni Niwunhella (32) என பின்னர் தெரியவந்தது.
சிறிது நேரத்தில், Splott என்னுமிடத்தில் நிரோதா கொலை தொடர்பாக திசாரா (Thisara Weragalage, 37) என்பவரை பொலிசார் கைது செய்தார்கள்.
திசாராவும் இலங்கையைச் சேர்ந்தவர்தான். அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று Cardiff கிரௌன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட திசாரா, தான் நிரோதாவை கொலை செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9ஆம் திகதி துவங்க உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |