சுவிஸ் மாகாணமொன்றில் தொடர்ச்சியாக வீடுகளுக்கு தீவைத்த நபர்: நீதிபதியிடம் எழுப்பிய கேள்வி
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில், தொடர்ச்சியாக கட்டிடம் ஒன்றிலுள்ள வீடுகளுக்கு தீவைத்த நபர் ஒருவர் மீதான வழக்கு துவங்கியுள்ளது.
தொடர்ச்சியாக வீடுகளுக்கு தீவைத்த நபர்
ஜெனீவாவிலுள்ள கட்டிடம் ஒன்றில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் ஒயின் சேகரித்து வைக்கும் இடங்களில் ஒரே ஆண்டில் எட்டு முறை தீப்பற்றியது.
அந்த கட்டிடத்தில் வாழ்ந்துவரும் 64 வயது நபர் ஒருவர் இந்த சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், பல ஆண்டுகளாக தான் வாழும் வீட்டுக்கு தான் ஏன் தீவைக்கப்போகிறேன் என நீதிபதியுடம் கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.
கடந்த ஆண்டு, அதே கட்டிடத்திலுள்ள வீடு ஒன்றில் தீப்பிடித்ததில் இரண்டு பேர் பலியானார்கள். ஆனால், அந்த வழக்கில் இந்த நபர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை.
அந்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கவேண்டும் என அரசு சட்டத்தரணிகள் கோரியுள்ளார்கள்.
ஆனால், அவருக்கு bi-polar disorder என்னும் மன நல பாதிப்பு உள்ளதால், அவருக்கு மன நல சிகிச்சை தேவை என்கிறார்கள் அவரது சட்டத்தரணிகள். வழக்கு தொடர்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |