10 ஆயிரம் ரூபாய்க்காக மதுவில் தண்ணீர் கலக்காமல் குடித்த நபருக்கு ஏற்பட்ட சோகம்
நண்பர்கள் விடுத்த 10 ஆயிரம் ரூபாய் சவாலால் மதுவில் தண்ணீர் கலக்காமல் குடித்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நபர் உயிரிழப்பு
இந்திய மாநிலமான கர்நாடகா, கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா பூஜாரஹள்ளி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (21) என்பவருக்கு ஓராண்டு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு கடந்த 8 நாட்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கார்த்திக் தனது நண்பர்களான வெங்கடரெட்டி, சுப்பிரமணி உள்பட 5 பேருடன் மது அருந்தினார்.
அப்போது, ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 மது போத்தல்களில் உள்ள மதுவை தண்ணீர் கலக்காமல் குடிப்பதாக கூறி கார்த்திக் தனது நண்பர்களிடம் சவால் விட்டார். அவரது சவாலை ஏற்ற அவருடைய நண்பர்கள் அவ்வாறு குடித்தால் ரூ.10 ஆயிரம் தருவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, கார்த்திக் மதுவில் தண்ணீர் கலக்காமல் குடித்ததால் உடலநலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் உயிரிழந்தார்.
இதனால் அவரது மனைவியும், குடும்பத்தாரும் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும், இது தொடர்பாக பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |