கனடாவில் வாழும் பெற்றோர்! அந்நாட்டிற்கு செல்லும் கனவில் இருந்த இளைஞன் உயிரிழப்பு.. நடந்தது என்ன?
கனடா செல்லும் கனவில் இருந்த இளைஞர் உயிரிழப்பு.
விசா கிடைக்காத விரக்தியில் எடுத்த விபரித முடிவு.
கனடாவுக்கான விசா தொடர்ந்து மறுக்கப்பட்ட சோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவரின் பெற்றோர் கனடாவில் வசிக்கின்றனர். இதையடுத்து தானும் கனடாவுக்கு செல்ல வேண்டும் என்ற கனவில் அவர் இருந்தார்.
ஆனால் ஐந்து முறை முயன்றும் கனடா விசாவை பெறும் அவரின் கனவு தோல்வியில் முடிந்துள்ளது. இதையடுத்து சோகத்தில் இருந்த அவர் பாட்டி வீட்டின் ஐந்தாவது மாடியில் இருந்து நேற்று முன்தினம் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றினார்கள். அவரின் அறையில் மதுபாட்டில் மற்றும் சிகரெட்கள் கண்டெடுக்கப்பட்டது. அவர் உயிரிழந்த தகவல் கனடாவில் உள்ள பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது.
அவர்கள் கனடாவில் இருந்து வந்தவுடன் பிரேத பரிசோதனை நடைபெறும் என தெரியவந்துள்ளது.