லண்டனில் ரயில் தண்டவாளத்தில் விழுந்த நபர்: அடுத்து நிகழ்ந்த பயங்கரம்
லண்டன் சுரங்க ரயில் பாதையில் விழுந்த முதியவர் ஒருவர் மீது, நான்கு ரயில்கள் அடுத்தடுத்து ஏறிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
ரயில் தண்டவாளத்தில் விழுந்த நபர்
கிழக்கு லண்டனிலுள்ள Stratford ரயில் நிலையத்தில், பிரையன் (Brian Mitchell, 72) என்னும் முதியவர் ரயில் பாதையில் தவறி விழுந்துள்ளார்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த ரயில் ஒன்று அவர் மீது ஏறிச் சென்றுள்ளது.
அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து மூன்று ரயில்கள் அவர் மீது ஏறிச் சென்றுள்ளன.
விடயம் என்னவென்றால், நான்காவது ரயிலின் சாரதிதான் ரயில் பாதையில் யாரோ விழுந்து கிடப்பதைக் கண்டுபிடித்துள்ளார்.
அதைவிட சோகம் என்னவென்றால், பிரையன் ரயில் பாதையில் தவறிவிழுந்த நேரத்தில், அது மதிய நேரம் என்பதால், ரயில் நிலையத்தில் பயணிகள் யாரும் இல்லையாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |