ட்ரம்ப் ஹொட்டல் முன் டெஸ்லா கார் வெடித்த விடயம்: தொடர்ந்து வெளியாகிவரும் அதிரவைக்கும் தகவல்கள்
ட்ரம்ப் ஹொட்டல் முன் டெஸ்லா கார் வெடித்த விடயத்தில் தொடர்ந்து புதிய புதிய தகவல்கள் வெளியாகிவருகின்றன.
ட்ரம்ப் ஹொட்டல் முன் வெடித்த டெஸ்லா கார்
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்புக்கு சொந்தமான ஹொட்டல்களில் ஒன்று லாஸ் வேகஸ் நகரில் அமைந்துள்ளது.
நேற்று காலை, உள்ளூர் நேரப்படி 8.40 மணிக்கு, டெஸ்லா கார் ஒன்று அந்த ஹொட்டல் முன் வந்து நின்றுள்ளது.
சிறிது நேரத்தில், அந்தக் காரிலிருந்த வெடிபொருட்கள் வெடித்துச் சிதறியுள்ளன.
இந்த வெடிவிபத்தில் அந்தக் காரின் சாரதி உயிரிழந்துள்ளார், ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
தொடர்ந்து வெளியாகிவரும் அதிரவைக்கும் தகவல்கள்
இந்த விடயத்தில் தொடர்ந்து புதிய புதிய தகவல்கள் வெளியாகிவருகின்றன.
முதலில், அந்தக் கார் வெடிப்பில் சிக்கி உயிரிழந்தவர் ராணுவத்தின் சிறப்பு படையின் உறுப்பினரான, மேத்யூ (Matthew Livelsberger) என ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
மேத்யூ, வீரத்துக்காக வெண்கல நட்சத்திரங்கள் உட்பட விருதுகள் பல பெற்ற ஒரு ராணுவ வீரர் ஆவார்.
தற்போது, அந்தக் கார் வெடிக்கும் முன்பே, மேத்யூ தலையில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயம் இருந்ததாக அப்பகுதி ஷெரீஃபான கெவின் (Kevin McMahill) என்பவர் தெரிவித்துள்ளார்.
அந்தக் காருக்குள், மேத்யூவின் காலடியில் துப்பாக்கி ஒன்றும் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவர் தன்னைத்தான் துப்பாக்கியால் சுட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கக்கூடும் என அதிகாரிகள் நம்புகிறார்கள்.
மேலும், அந்தக் காருக்குள் மற்றொரு துப்பாக்கியும், ஒரு பாஸ்போர்ட், ராணுவ அடையாள அட்டை, ஒரு ஐபோன் மற்றும் ஒரு ஸ்மார்ட் வாட்ச் ஆகிய விடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எதற்காக இந்த அதிரவைக்கும் சம்பவம் அரங்கேற்றப்பட்டது என்பது தெரியவராத நிலையில், பரபரப்பை உருவாக்கியுள்ள அந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |