பிரித்தானியாவில் திரைப்பட பாணியில் சம்பவம்: பொலிஸார் கூறிய விடயம்
Man dies after car chase in warwickshire uk: பிரித்தானியாவில் காவல்துறை துரத்தலைத் தொடர்ந்து கார் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.
இங்கிலாந்தின் வார்விக்ஷயரில் காவல்துறை அதிகாரிகள் துரத்திச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்தார்.
Audi காரினை விரட்டிச் சென்ற காவல்துறை
இங்கிலாந்தின் வார்விக்ஷயரில் உள்ள Stratford-upon-Avonயில் காவல்துறையினர் ஒரு கருப்பு Audi காரினை விரட்டிச் சென்றனர்.

பர்மிங்காம் சாலையில் அந்த கார் நிற்க தவறியதைத் தொடர்ந்து காவல்துறையினர் இந்த துரத்தலை தொடங்கினர்.
திரைப்படத்தை விஞ்சும்படியான இந்த துரத்தலின்போது, குறித்த Audi கார் மற்றொரு வெள்ளைநிற Ford Puma கார் மீது மோதியது.
ஒருவர் மரணம், மூவர் படுகாயம்
இதில் Audi காரினை இயக்கிய ஆண் நபர் உயிரிழந்தார். மேலும், Ford காரின் சாரதி உட்பட மூவர் காயமடைந்தனர்.
இதனையடுத்து, இரண்டு ஆம்புலன்ஸ்கள் மற்றும் துணை மருத்துவ அதிகாரிகள் உட்பட இரண்டு வான்வழி ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
இதற்கிடையில், துரத்தலின்போது மேலும் பல வாகனங்களும் சேதமடைய, காவல்துறையின் கண்காணிப்பு அமைப்பான Independent Office for Police Conduct இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இச்சம்பவம் குறித்து உயிரிழந்த நபர் மற்றும் அப்பெண்மணி ஆகியோரின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், காவல்துறை அதிகாரிகள் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.
காவல்துறை
துரத்தல் நடவடிக்கையின்போது வேறு பல வாகனங்களும் சேதமடைந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறையின் செயல்பாடுகளை கண்காணிக்கும் அமைப்பான சுயாதீன காவல்துறை நடத்தை அலுவலகத்திடம் (IOPC) ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கண்காணிப்பாளர் ஸ்டீவ் ஃபிளாவெல் கூறுகையில், "இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினருடனும் எங்கள் எண்ணங்கள் உள்ளன; இக்கடினமான சூழலில் அவர்களுக்குத் தேவையான சிறப்பு உதவிகளை நாங்கள் வழங்கி வருகிறோம். காவல்துறையின் நடவடிக்கையைத் தொடர்ந்து உயிரிழப்பு ஏற்பட்டதால், நாங்கள் கட்டாய நடைமுறையின்படி இந்த விவகாரத்தை 'சுயாதீன காவல்துறை நடத்தை அலுவலகத்திடம்' பரிந்துரைத்துள்ளோம்" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |