100 அடி உயரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட ராட்சத பலூனில் இருந்து கீழே விழுந்த நபர் உயிரிழப்பு
100 அடி உயரத்திற்கு மேலே சென்ற ராட்சத பலூனில் இருந்து கீழே விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த நபர்
இந்திய மாநிலமான ராஜஸ்தான், பரான் மாவட்டத்தின் 35வது ஆண்டு நிறுவன விழா கடந்த 3 நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷாருக்கானின் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்த நீதா அம்பானியின் சகோதரி யார்?
இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் ராட்சத பலூன் பறக்க விடும் நிகழ்வு நடைபெற இருந்தது. அப்போது பலூனை இயக்குவதாக வாசுதேவ் காத்ரி (40 வயது) என்ற ஊழியர் பலூனின் கயிற்றை பிடித்து வைத்திருந்தார்.
அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக ராட்சத பலூன் திடீரென பறந்ததால் இவரும் 100 அடி உயரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார். பின் கயிறு அறுந்து அங்கிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தற்போது இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் வாசுதேவ் காத்ரிக்கு பலூனை இயக்குவதில் 30 ஆண்டுகள் அனுபவம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
राजस्थान में हॉट एयर बैलून शो...!
— Arpit Sharma (@Arpit_Dbhaskar) April 10, 2025
80 फीट की ऊंचाई से रस्सी टूटने से गिरा युवक। pic.twitter.com/cT6sJAV5jR
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |