பிள்ளைகளை சந்திக்க ஜேர்மனி புறப்பட்ட இந்தியர்: விமான நிலையத்தில் நிகழ்ந்த சோகம்
ஜேர்மனியில் வாழும் தன் பிள்ளைகளைப் பார்ப்பதற்காக புறப்பட்ட இந்தியர் ஒருவர், விமானத்தில் ஏறுவதற்கு முன்பே மரணமடைந்துவிட்டார்.
ஜேர்மனி புறப்பட்ட இந்தியர்
இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சென்னையைச் சேர்ந்தவர் சரவணன் (73). ஜேர்மனியில் வாழும் தங்கள் பிள்ளைகளைக் காணச் செல்ல சரவணனும் அவரது மனைவியும் முடிவு செய்துள்ளார்கள்.
அதன்படி, திங்கட்கிழமை இரவு, சென்னை விமான நிலையத்தில் அவர்கள் விமானம் ஏற காத்திருக்கும்போது, திடீரென சுயநினைவிழந்து சரிந்துள்ளார் சரவணன்.
சரவணனின் மனைவி உதவி கோரி அழைக்க, உடனடியாக விமான நிலையத்திலிருந்த மருத்துவ உதவிக்குழுவினர் சரவணனை சோதிக்க, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்துள்ளது.
பிள்ளைகளை சந்திக்க ஜேர்மனிக்கு புறப்பட்ட நிலையில், தந்தை விமான நிலையத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |