பிரித்தானிய கடற்கரையில் மீண்டும் சோகம்: கடல் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
பிரித்தானியாவின் ஃப்ரின்டன் கடற்கரையில் நீரில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீரில் மூழ்கி உயிரிழந்த நபர்
ஃப்ரின்டன் கடற்கரையில் கடலில் சிக்கி தவித்த நபர் இறுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்து இருப்பதாக எசெக்ஸ் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை பிற்பகல் 2.10 மணி அளவில் கடல் நீரில் மூழ்கிய நபர் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டார்.
அவருக்கு போதிய முதலுதவி சிகிச்சைகள் வழங்கியும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

தகவல் கிடைத்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு மருத்துவ ஊர்தி மற்றும் வான்வழி அவசர ஊர்தி உட்பட 10 க்கும் மேற்பட்ட அவசர சேவை வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
மேலும் சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தடையின்றி நடைபெறும் விதமாக பொதுமக்கள் அப்பகுதியை தவிர்க்குமாறு உள்ளூர் காவல் துறையினர் கேட்டுக் கொண்டனர்.
எசெக்ஸ் கடற்கரையில் தொடரும் சோகம்
இந்த உயிரிழப்பு சம்பவத்திற்கு முன்பு ஜூலை 22ம் திகதி மேற்கு பகுதியில் உள்ள மெர்சியாவில் நிகழ்ந்த விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்து இருந்தான்.
அத்துடன் ஏற்கனவே அந்த விபத்தில் 41 வயது பெண்ணும், அவரது 15 வயது மகளும் உயிரிழந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |