பட்டப்பகலில் மொத்த மக்களையும் பயத்தில் உறைய வைத்த சம்பவம்: பின்னர் வெளியான தகவல்
பிரித்தானியாவில் ஆரம்பப் பள்ளி அருகே இரண்டு நாய்களால் தாக்கப்பட்டு குற்றுயிராக மீட்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கோர சம்பவம்
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சில கெஜம் தொலைவில் தான் தொடர்புடைய ஆரம்பப் பள்ளி அமைந்துள்ளது. துணிச்சலுடன் சிலர் அந்த நாய்களை அப்புறப்படுத்த முயன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நேற்று பிற்பகல் 3.12 மணியளவில் ஸ்டாஃபோர்ட்ஷையரில் உள்ள ஸ்டோனால் பகுதியிலேயே குறித்த கோர சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக St Peter's ஆரம்பப் பள்ளி நிர்வாகம், சிறார்கள் அவசரமாக வெளியேறுவதை தடை செய்தனர்.
இந்த நிலையில், அந்த நபர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையை நாடும் போதே உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த நபர் இருந்துள்ளதாகவே கூறப்படுகிறது.
It’s clear the American XL Bully dog is a danger to our communities.
— Rishi Sunak (@RishiSunak) September 15, 2023
I’ve ordered urgent work to define and ban this breed so we can end these violent attacks and keep people safe. pic.twitter.com/Qlxwme2UPQ
ரிஷி சுனக் உறுதி
இந்த விவகாரத்தில் Lichfield பகுதியை சேர்ந்த 30 வயது நபர் கைதாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆபத்தான முறையில் கட்டுப்பாட்டை மீறிய நாய்களை வைத்திருந்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளதுடன், அந்த நாயின் இனம் தொடர்பில் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் ரிஷி சுனக் தமது சமூக ஊடக பக்கத்தில் American XL Bully நாய் தொடர்பில் நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக உறுதி அளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |