ஆங்கிலக்கால்வாயில் புலம்பெயர்வோருக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சி வெற்றிபெறாமல், நடுவழியிலேயே உயிரிழந்துள்ளார் புலம்பெயர்வோர் ஒருவர்.
புலம்பெயர்வோருக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு
சனிக்கிழமை காலை, ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியாக சிறுபடகொன்று பிரான்சிலிருந்து புறப்பட்டுள்ளது.
ஆனால், அதனால் தொடர்ந்து முன்னேற முடியாமல், மீண்டும் Equihen கடற்கரைக்கே திரும்பியுள்ளது.
இந்நிலையில், அந்த படகிலிருந்த ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
கடற்கரைக்கு கொண்டுவரப்பட்ட அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது உயிரைக் காப்பாற்றமுடியாமல்போய்விட்டது.
மரணமடைந்த அவர் யார், எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
இந்த துயர சம்பவம் தொடர்பாக பிரான்ஸ் அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |