கொழும்பில் இளம் தொழிலதிபர் எடுத்த வேண்டாத முடிவு: ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு
கொழும்பில் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இளம் தொழிலதிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை City of Dreams என்ற ஹோட்டலில் 45 வயது மதிக்கத்தக்க நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
கண்டியை சேர்ந்த தொழிலதிபரான அவர், City of Dreams என்ற ஹோட்டலில் 4 நாட்கள் தங்கியிருந்ததாக தெரிவித்துள்ளனர்.
ஹோட்டல் ஊழியர்கள் அவரது அறையின் கதவு மூடப்பட்டு இருப்பதை குறித்து சந்தேகமடைந்த நிலையில், பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அறையின் கதவை திறந்து பார்த்த போது இளம் தொழிலதிபர் சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில், எதற்காக அவர் உயிரை மாய்த்து கொண்டுள்ளார் என்பது குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் இளம் தொழிலதிபர் கேசினோவில் சூதாட்டத்தில் பெரும் தொகை பணத்தை இழந்த நிலையில் விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |