பிரித்தானியாவில் பரவும் எலி வைரஸ்: இறப்பு கணக்கை தொடங்கியதால் மக்கள் அச்சம்!
பிரித்தானியாவில் எலிகளில் இருந்து பரவக்கூடிய லாஸ்சா வைரஸ்(Lassa Virus) காய்ச்சலில் பாதிக்கப்பட்டு ஒருவர் இறந்துள்ளார். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு நபர்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் குறித்து பிரித்தானியாவின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், லாஸ்சா வைரஸால் பாதிக்கப்பட்டு பிரித்தானியாவில் முதல் நபர் இறந்துள்ளதாகவும், இதுவரை பிரித்தானியாவில் மூன்று பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தேவையான முன்னெச்சரிக்கை அறிவுரைகள் வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாஸ்சா காய்ச்சலானது, எலிகள் சிறுநீர் அல்லது மலம் கழித்த உணவு பொருள்களை உண்பது, தொடுவது போன்ற செயல்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ் ஆனது, தலைவலி, தொண்டை வலி, மற்றும் வாந்தி ஆகிய உபாதைகளை தரும் என்றும், சிலருக்கு வாய், மூக்கு, மற்றும் அந்தரங்க பகுதிகளில் இரத்தக்கசிவை ஏற்படுத்தவும் செய்வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நோய்யால் பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த இறப்பு விகிதம் 1 சதவிகித்தில் இருப்பதாகவும், 80% பேருக்கு அறிகுறிகள் இருப்பது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லாஸ்சா வைரஸானது 5ல் ஒருவருக்குக் கல்லிரல் சிறுநீரகம் போன்றவற்றை தீவரமாக பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாஸ்சா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்த நபருக்கு சிகிச்சை வழங்கிய Bedfordshire மருத்துவமனையின் NHS அறக்கட்டளையின் செய்தி தொடர்பாளர் இது குறித்து தெரிவிக்கையில், லாஸ்சா வைரஸால் இறந்த நபரின் குடும்பத்திற்கு மருத்துவமனை சார்பில் இரங்கலை தெரிவித்து கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கும் மற்றும் எங்களது பணியாளர்களுக்கும் அனைத்து விதமான உதவிகளையும் செய்ய தயாராக இருபாதகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தொற்று பாதிக்கபட்ட நபர்களிடம் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய பிரித்தானியாவின் சுகாதார பாதுகாப்பு நிறுவனத்திற்கு உறுதுணையாக இருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.