குழந்தைகளை காப்பாற்ற முயன்ற நபர் பலி: பிரித்தானிய கடற்கரையில் நடந்த சோகம்
இங்கிலாந்தில் குழந்தைகளை காப்பாற்ற முயன்றவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் ஸ்கெக்னஸ் (Skegness) அருகே இன்கோல்மெல்ஸ் (Ingoldmells) கடற்கரையில், கடலில் தத்தளித்த இரண்டு குழந்தைகளைக் காப்பாற்ற முயன்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
கடற்கரைக்கு அருகிலுள்ள நடைபாதையிலிருந்து கடலில் இறங்கிய அந்த நபர், குழந்தைகளைக் காப்பாற்ற முயன்ற போது எதிர்பாராத விதமாக அவரும் நீரில் மூழ்கி சிரமப்பட்டுள்ளார்.
உடனடியாக அவரை மீட்கும் பணிகள் நடந்த போதிலும், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
"இந்த மிகவும் துயரமான நேரத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அன்பானவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று லிங்கன்ஷயர் காவல்துறை (Lincolnshire Police) தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குழந்தைகள் குறித்த மேலதிக விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |