ஜேர்மன் நெடுஞ்சாலையில் தாறுமாறாக ட்ரக் ஓட்டிய நபர்: 19 பேர் காயம்
ஜேர்மன் நெடுஞ்சாலையில் தாறுமாறாக ட்ரக் ஓட்டிய ஒருவரால் 19 பேர் காயமடைந்துள்ளார்கள், அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தாறுமாறாக ட்ரக் ஓட்டிய நபர்
சனிக்கிழமையன்று, ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்திலுள்ள Neuss நகருக்கருகிலுள்ள நெடுஞ்சாலையில், போலந்து நாட்டவரான ஒருவர் ட்ரக் ஒன்றை தறுமாறாக செலுத்திவந்துள்ளார்.
அவர் மது அல்லது போதைப்பொருள் ஏதோ ஒன்றின் கட்டுப்பாட்டிலிருந்தது போல தெரிகிறது.
பொலிசார் வாகனத்தை நிறூத்தச் சொல்லியும் நிறுத்தாத அந்த நபர் திடீரென பாதையின் மறுபக்கம் ட்ரக்கைக் கொண்டு செல்ல, எதிரே வந்த பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளதுடன், பல வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
அத்துடன், அவர்களில் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளார்கள். அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
விபத்தை ஏற்படுத்திய ட்ரக்கை இயக்கிய 30 வயதான சாரதியும் காயமடைந்துள்ளதால், அவரது உடல் நிலை சற்று முன்னேறிய பிறகுதான் அவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொள்ளும் நிலை காணப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |