முதலீட்டாளர்களால் நிராகரிக்கப்பட்ட நபர்... இன்று ரூ 6700 கோடி மதிப்பு நிறுவனம்: அவரது தொழில்
பவன் குண்டுப்பள்ளியின் நம்பிக்கையூட்டும் கதையை அறிந்துகொள்வதன் மூலம் வணிகத்துறையில் ஈடுபடும் பல ஆர்வமுள்ள புதியவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற உந்துதல் பெறலாம்.
வணிக உலகில் தனக்கென ஒரு பெயர்
தெலுங்கானாவைச் சேர்ந்த திறமையான இளைஞரான பவன், சிறு வயதிலேயே வர்த்தகம் மற்றும் கணினித்துறையில் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
கல்வியில் அவருக்கு இருந்த ஆர்வம், இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான IIT காரக்பூரில் அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்பாக அமைந்தது. படிப்பை முடித்ததும் சாம்சங் நிறுவனத்தில் பணிபுரிந்து மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டார்.
இருப்பினும், தனித்துவமாக எதையேனும் ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற வலுவான ஆசையை அவர் எப்போதும் கொண்டிருந்தார். வணிக உலகில் தனக்கென ஒரு பெயரை நிலைநிறுத்தும் முயற்சியில், பவனும் அவரது நண்பர் அரவிந்த் சங்காவும் இணைந்து theKarrier என்ற நிறுவனத்தை நிறுவினர்.
நகரங்களுக்கு இடையேயான லாஜிஸ்டிக்ஸ் சேவைகளை வழங்க மினிட்ரக்குகளைப் பயன்படுத்தும் ஒரு நிறுவனம். துரதிர்ஷ்டவசமாக, திட்டம் தோல்வியடைந்தது, மேலும் இருவரும் மற்றொரு பின்னடைவைச் சமாளிக்க வேண்டியிருந்தது.
தங்களின் தோல்வி குறித்து தீவிரமாக ஆராய்த பவனுக்கு ஒரு உண்மை தெரிய வந்தது. நிறுவனத்திற்கு லாபம் ஈட்டுவதற்காக செலவுகளைக் குறைக்க வேண்டும். வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.
இந்த புரிதல் 2014ல் Rapido என்ற திட்டத்தை நிறுவ தூண்டுதலாக அமைந்தது. ஆனால் அப்போது இந்தியாவில் Uber மற்றும் Ola நிறுவனங்கள் கோலோச்சத் தொடங்கியிந்தது. மட்டுமின்றி, Rapido திட்டத்தை முன்னெடுத்து செல்ல முதலீடு திரட்டுவதிலும் போராட வேண்டி இருந்தது.
சுமார் 75 முதலீட்டாளர்கள்
சுமார் 75 முதலீட்டாளர்கள் Rapido திட்டத்தை நிராகரித்துள்ளனர். இந்த பின்னடைவு இருந்தபோதிலும், ராபிடோவை வெற்றியடையச் செய்யும் முயற்சியில் பவன் விடாப்பிடியாக இருந்தார்.
தொடக்கத்தில் அடிப்படைக் கட்டணமாக ரூ 15 மற்றும் ஒரு கிலோமீற்றருக்கு ரூ.3 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், நிறுவனம் எதிர்பார்த்த அளவு வெற்றியை அடையவில்லை.
இந்த நிலையில், 2016ல் Hero MotoCorp நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் Pavan Munjal முதலீடு செய்ய முன்வந்தார். அதன் பின்னர் சில முதலீட்டாளர்கள் முன்வந்தனர்.
தற்போது 100 நகரங்களுக்கு மேல் ராபிடோ சேவை செயல்படுகிறது. 7 லட்சம் வடிக்கையாளர்கள், 50,000 சாரதிகள் பதிவு செய்துள்ளனர். Rapido நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ 6700 கோடி என்றே கூறப்படுகிறது.
50 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் Rapido செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். ஸ்விக்கி மற்றும் பிற வணிகங்கள் கடந்த ஆண்டு மட்டும் Rapido நிறுவனத்திற்கு ரூ.1370 கோடி கொடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |