மகன் கருப்பாக பிறந்ததால் சொத்தை எழுதி தர மறுத்த தந்தை: அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்
பிரித்தானியாவில் தனது மகன் கருப்பாக பிறந்ததால், அவருக்கு தனது சொத்தில் பங்கில்லை என அவரது தந்தை கூறியது நிற பாகுப்பட்டை காட்டுவதாக விமர்சிக்கப்படுகிறது.
இரண்டு திருமணம்
பிரித்தானியாவின் லண்டனை சேர்ந்த சன்னி பைபர்ன்(sunny pyburn) என்பவர், தனக்கு வர வேண்டிய 6 லட்சம் டொலர் மதிப்பிலுள்ள சொத்தை தந்தை வழங்க மறுப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
@mail
சன்னி பைபர்ன்(38) என்பவர், பில் பைபர்ன்(bill pyburn) என்பவரது முன்னாள் மனைவியான உளவியலாளர் கீதா டெப்பிற்கு மகனாக பிறந்துள்ளார். கீதா டெப் ஆசியாவை சேர்ந்தவர் ஆவார்.
பின்னர் அவர் 1969ஆம் ஆண்டில் ஜாக்கி என்பவரை திருமணம் செய்துள்ளார். அவர்கள் இருவரும் வின்செஸ்டருக்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
நிற பாகுபாட்டால் சித்திரவதை
சன்னி பைபர்ன் பிறந்தது முதலே அவர் மீது நிற பாகுபாடு காட்டிய பில் பைபர்ன் வெறுத்துள்ளார். முன்னாள் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட அவர், இந்த குழந்தை தனக்குப் பிறக்கவில்லை என கூறியுள்ளார்.
மேலும் சிறுவனாக இருந்த சன்னி பைபர்னை அடித்து சித்திரவதை செய்ததாக சன்னி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
@mail
சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த சன்னியின் தந்தை, இறப்பதற்கு முன் சொத்து எல்லாம் தனது இரண்டாவது மனைவிக்கு தான் சொந்தம் என எழுதி வைத்துள்ளார். 70 வயதான ஜாக்கி தனது கணவரோடு வசித்த அதே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
மேலும் முன்னர் பில் பைபர்ன் துஷ்பிரோயக வழக்கொன்றில் குற்றம் சாட்டப்பட்ட போது அவருக்கு மகன் சன்னி உதவவில்லை என தெரிகிறது. இதனால் தன் மேல் தந்தை கோபமாக இருக்கலாம் என சன்னி கூறியுள்ளார்.
அதிரடி தீர்பளித்த நீதிமன்றம்
இந்தநிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி “இந்த வழக்கில் ஜாக்கியும் மிகவும் துன்பப்பட்டிருக்கிறார். தன் கணவரை இழந்து வாழும் அந்த முதியவருக்கே சொத்தை வழங்குவதில் நியாயமிருக்கிறது” என கூறியுள்ளார்.
@gettyimages
மேலும் ”இளைஞனான சன்னி தன்னுடைய வாழ்க்கை தரத்தை தன்னால் உயர்த்திக் கொள்ள முடியும். 70 வயதான ஜாக்கியால் என்ன செய்ய முடியும். மேலும் அவர் நீண்ட ஆண்டு தன் கணவரோடு வாழ்ந்திருக்கிறார்.”
”சன்னிக்கு நடந்த நிற பாகுப்பாட்டு துஷ்பிரயோகத்தை நாங்கள் எதிர்க்கிறோம். ஆனால் சொத்தில் ஒரு பங்கை கூட சன்னிக்கு வழங்க முடியாது” என லண்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.