உருளைக்கிழங்கு சிப்ஸ்க்கு பதிலாக பிரித்தானிய நபருக்கு கிடைத்த பொருள்! என்ன தெரியுமா?
இங்கிலாந்தில் உருளை சிப்ஸ் பாக்கெட்டில் சிப்ஸ்க்கு பதிலாக முழு உருளைக்கிழங்கு இருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
குழந்தைகள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சிப்ஸ் வகைகளுள் ஒன்று உருளைக்கிழங்கு சிப்ஸ். ஆனால் கடையில் வாங்கும் பாக்கெட்டில் பெரும்பாலும் காற்று தான் நிரப்பப்பட்டு இருக்கும்.
ஆனால் அது நமக்கு தெரிந்திருந்தாலும் அதை தான் நாம் வாங்கி சாப்பிடுவோம். இந்நிலையில் பிரித்தானியா நாட்டில் வினோத சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இங்கிலாந்து நகரத்தில் வசித்து வருபவர் டாக்டர் டேவிட் பாய்ஸி.
இவர் சமீபத்தில் உருளை கிழங்கு சிப்ஸ் வாங்கியுள்ளார். அதை அவர் பிரித்து பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கினர். அதில் உருளைக்கிழங்கு சிப்ஸ்க்கு பதிலாக முழு உருளைக்கிழங்கு இருந்துள்ளது.
இதையடுத்து அவர் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து இந்த பதிவுக்கு பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
So I opened a bag of @KETTLEChipsUK today to find no crisps. Just a whole potato. ? pic.twitter.com/PGEqGMqIWF
— Dr David Boyce (@DrDavidBoyce) October 16, 2021
இதற்கிடையில் சிப்ஸ் நிறுவனம் எங்கே இந்த தவறு நடந்தது என்பது தெரியவில்லை. கூடிய விரைவில் எங்கு தவறு நடந்தது குறித்து உங்களுக்கு தெரிவிக்கப்படும் என்று பதிலளித்துள்ளார்.