சுவிட்சர்லாந்தில் குதிரைகளை பயமுறுத்திய நபருக்கு அபராதம்
சுவிட்சர்லாந்தில், குதிரைகளை பயமுறுத்திய நபர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதைக் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
குதிரைகளை பயமுறுத்திய நபர்
சுவிட்சர்லாந்தின் சூரிக் மாகாணத்தில் அமைந்துள்ள Oberland என்னுமிடத்தில், குதிரைகள் புல்வெளி ஒன்றில் மேய்ந்துகொண்டிருந்தபோது, ஒருவர் குதிரை போல் உடையணிந்து குதிரைகள் முன் நடனமாடியுள்ளார்.

அவரைக் கண்டு பயந்த குதிரைகள் கலைந்து ஓட, ஒரு குதிரை வேலியைத் தாண்டி குதிக்கும்போது கீழே விழுந்து அதன் கால் முறிந்துவிட்டது.
தன் வாழ்நாள் முழுவதும் இனி சரியாக நடக்க முடியாத நிலை அந்த குதிரைக்கு ஏற்பட்டுள்ளது.
ஆகவே, குதிரைகளை பயமுறுத்திய அந்த 37 வயது நபருக்கு நீதிமன்றம் ஒன்று 6,500 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதித்துள்ளது. அத்துடன், வழக்குச் செலவுக்கான தொகையையும் அவர் செலுத்தவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |