ஒருதலை காதலால் லண்டன் வரை இளம்பெண்ணை பின்தொடர்ந்த நபர்: பின்னர் நடந்த கொடுஞ்செயல்
ஒருதலை காதலால் பாகிஸ்தானில் இருந்து லண்டன் வரை தமது அண்டை வீட்டு இளம்பெண்னை பின்தொடர்ந்த இளைஞர் ஒருவர், இறுதியில் அவரை கொலை செய்து சாலையோரத்தில் வீசிச் சென்ற கொடூரம் அம்பலமாகியுள்ளது.
சூட்கேஸில் திணிக்கப்பட்ட நிலையில்
குறித்த பெண்ணின் சடலம் ஒரு பெரிய சூட்கேஸில் திணிக்கப்பட்ட நிலையில் சாலையோரத்தில் இருந்து மீட்கப்பட்டது. பாகிஸ்தான் நாட்டவரான 27 வயது முஹம்மது அர்ஸ்லான் 21 வயது ஹினா பஷீர் என்பவரை மூச்சுத்திணறடித்து கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
Coventry University London
முகம் மறைக்கும் மாஸ்க் ஒன்றை பயன்படுத்தி அவரது வாய்க்குள் திணித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார். மட்டுமின்றி, இல்ஃபோர்ட், கிழக்கு லண்டனில் முஹம்மது அர்ஸ்லான் தங்கியிருந்த குடியிருப்பில் வைத்தே இந்த கொலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த இளம்பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதமே, கொலையில் முடிந்துள்ளது. ஆனால், அவரை அமைதிப்படுத்த முயன்றதாகவும், அதில் அவர் மரணமடைந்துள்ளதாகவும் முஹம்மது அர்ஸ்லான் விசாரணை அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.
முஹம்மது அர்ஸ்லானின் இந்த வாதத்தை ஏற்க மறுத்த அதிகாரிகள், கோபம் மற்றும் பொறாமை காரணமாகவே ஹினாவை அர்ஸ்லான் கொலை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
திட்டமிட்டு கொலை செய்யவில்லை
ஹினா மரணத்திற்கு காரணம் தாம் என விசாரணையின் முதல் நாளே அர்ஸ்லான் ஒப்புக்கொண்ட போதும், அவரை திட்டமிட்டு கொலை செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
Credit: mylondon
அர்ஸ்லானும் ஹினாவும் பாகிஸ்தானின் பைசலாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரே கிராமத்தில் வளர்ந்தவர்கள். மட்டுமின்றி ஹினாவுக்கு 11 வயதாக இருக்கும் போதே இருவரும் நட்பாகியுள்ளனர்.
இந்த நிலையில், அர்ஸ்லான் தமது காதலை வெளிப்படுத்த, அதை நிராகரித்த ஹினா தாம் இன்னொரு நபரை காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால் 2021 நவம்பரில் கல்விக்காக லண்டன் வந்த பின்னர் இன்னொரு நபரை அவர் காதலித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் உயிருடன் திரும்பவில்லை
ஹினா லண்டனில் வந்து சேர்ந்த சில மாதங்களில் அர்ஸ்லானும் லண்டன் வந்ததுடன், எசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்து, பகுதி நேர வேலை ஒன்றும் செய்து வந்துள்ளார்.
@getty
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் திகதி தமது தோழி ஒருவருடன் அர்ஸ்லான் தங்கியிருந்த குடியிருப்புக்கு சென்ற ஹினா அதன் பின்னர் உயிருடன் திரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.
இதனிடையே, ஹினாவுக்காக காத்திருந்த தோழி, தனியாகவே அவர் குடியிருப்புக்கு திரும்பியுள்ளார் என்றே கூறப்படுகிறது. இந்த வழக்கில் அர்ஸ்லான் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், அவருக்கான தண்டனை தீர்ப்பு வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |