மகனை தூங்கவிடாமல் 17 மணிநேரம் வீடியோ கேம் விளையாட வைத்த தந்தை! இப்படியும் தண்டனை வழங்கலாமா?
சீனாவில் தந்தை ஒருவர் 11 வயது மகனை தூங்கவிடாமல் 17 மணிநேரம் வீடியோ கேம் விளையாடும்படி கட்டாயப்படுத்தி வித்தியாசமான தண்டனையை வழங்கியுள்ளார்.
17 மணி நேரம் விடாமல் வீடியோ கேம்
சீனாவின் ஷென்சென் நகரை சேர்ந்த ஹுவாங் என்ற நபர், அவரது மகன் தூங்காமல் இரவு 1 மணிக்கு வீடியோ கேம் விளையாடி கொண்டு இருப்பதை கையும் களவுமாக பிடித்துள்ளார்.
இதையடுத்து அவரது 11 வயது மகனுக்கு கேமிங் தொழில்நுட்பத்தை அதிக நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகளை கற்பிக்கும் முயற்சியில் சிறுவனை தூங்க விடாமல் தொடர்ந்து வீடியோ கேம் விளையாடும் படி வித்தியாசமான தண்டனை ஒன்றை நிறைவேற்றியுள்ளார்.
கிட்டத்தட்ட 17 மணி நேரம் தூங்காமல், நிறுத்தாமல் வீடியோ கேம் விளையாடிய சிறுவன் ஒரு கட்டத்தில் என்னால் முடியவில்லை என்று கண்ணீர் விட்டு கதறி உள்ளான்.
இதையடுத்து விளையாடும் நேரத்தை கட்டுப்படுத்தும் புதிய ஒப்பந்தத்திற்கு சிறுவன் ஒப்புக் கொண்டதையடுத்து தந்தை ஹுவாங் தண்டனையை நிறுத்தியுள்ளார்.
பெற்றோர்கள் இந்த தண்டனையை பின்பற்ற வேண்டாம்
இந்த தண்டனை குறித்து சிறுவனின் குறிப்பில், "நான் 11 மணிக்கு முன் படுக்கைக்குச் செல்ல வேண்டும் என்று உறுதியளிக்கிறேன்.
unsplash
படுக்கைக்குச் செல்வதற்கு முன் தொலைபேசியை விளையாட மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்" என தந்தையின் ஒப்பந்தத்தில் எழுதியதாக குறிப்பிட்டுள்ளார்.
என் மகனுக்கு வழங்கிய இந்த தண்டனை முறை பயனுள்ளதாக இருந்தது, ஆனால் இதே பரிசோதனை மூலம் தங்கள் குழந்தைகளை தண்டிக்க மற்ற பெற்றோருக்கு அவர் ஒருபோதும் அறிவுறுத்த மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.