கனடாவில் புதிதாக கட்டப்பட்ட வீட்டில் இறந்து கிடந்த நபர்! உயிருக்கு போராடும் மற்றொருவர்.. பகீர் தகவல்
கனடாவில் புதிதாக கட்டப்பட்ட வீட்டில் வேலை செய்து வந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் நச்சு வாயுவால் அவர் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
Calgaryல் தான் இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. அதன்படி புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டில் அங்கு வேலை செய்யும் இரண்டு பேர் சுருண்டு விழுந்து கிடந்தனர்.
அங்கு வீட்டு உரிமையாளர்கள் வந்த போது நச்சு வாயு வாடை வந்தது, இதனால் பயந்து போன அவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு அவர்களும், மருத்துவ ஊழியர்களும் வந்த நிலையில் சுருண்டு விழுந்து கிடந்த இருவரில் ஒருவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிந்தது.
மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பொலிசார் கூறுகையில், இந்த சம்பவத்தில் சந்தேகத்துக்குரிய விடயங்கள் எதுவும் இல்லை என கருதுகிறோம், மோசமான காற்றோட்டம் இந்த சம்பவத்துக்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.
ஏனெனில் சம்பவம் நடந்த போது அந்த இரண்டு பேரும் பெயிண்ட் மற்றும் அரக்கை வைத்து வேலை செய்து வந்தனர், இதன் மூலம் நச்சு வாயு எதாவது ஏற்பட்டதா என தெரியவில்லை.
சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, இது குறித்து வேறு தகவல்கள் தற்போது இல்லை என கூறியுள்ளனர்.