மருத்துவமனை கேட்டரிங் அடுப்பில் ஆணின் சடலம்: பிரித்தானியாவில் பதறவைக்கும் சம்பவம்
பிரித்தானியாவின் நார்த்தாம்டன்ஷையர் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றின் கேட்டரிங் அடுப்பில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொது மருத்துவமனை
நடுக்கத்தை ஏற்படுத்தும் இந்த சம்பவமானது Kettering பொது மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக கருதவில்லை என்றே நார்த்தாம்டன்ஷையர் பகுதி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த பகுதியில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், பொலிசார் விசாரணையை துவங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த அடுப்புக்குள் அந்த நபர் எவ்வாறு வந்து சேர்ந்தார் என்பது தொடர்பான விளக்கமும் அளிக்கப்படவில்லை.
சந்தேகத்திற்குரியதாக கருதவில்லை
மேலும், இந்த மரணத்தை சந்தேகத்திற்குரியதாக கருதவில்லை என்றே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்பில் பொலிசாருடன் ஒத்துழைக்க தயார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, இந்த விவகாரம் தொடர்பில் தாங்கள் அறக்கட்டளையுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், தங்களுக்கு கிடைக்கும் அனைத்து தகவல்களையும் இந்த விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கும் விசாரணை அதிகாரிகளுக்கும் தெரிவிக்க தயாராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட பொலிசார் மறுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |