கனடாவில் உள்ள ஹொட்டலில் கிடைத்த சடலம்! பெயர் உள்ளிட்ட விபரம் குறித்த தகவல்
கனடாவில் உள்ள ஹொட்டலில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தவரின் பெயர் தெரியவந்துள்ளது.
ஆண் சடலம்
வின்னிபெக்கில் உள்ள ஹொட்டலில் இரு தினங்களுக்கு முன்னர் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றியதோடு 30களில் வயது கொண்ட காயங்களுடன் கிடந்த நபரை மீட்டனர்.
உயிரிழந்தவரின் பெயர் கார்ல் ஜார்ஜ் வெஸ்கவுப் எனவும் அவரின் வயது 40 எனவும் தெரியவந்துள்ளது.
Travis Golby/CBC
விசாரணை
ஜார்ஜ் பலத்த காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை.
படுகொலையை விசாரிக்கும் குழுவினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.