காதலி கீழே விழுந்து இறந்ததை அறியாமல் காரில் சென்ற காதலன் மீது கொலைக் குற்றச்சாட்டு: நீதிமன்றத்தின் முடிவு
தன் காதலி கீழே விழுந்து இறந்ததை அறியாமல் காரில் சென்ற காதலன் மீது, அவர்தான் தன் காதலியைக் கொலை செய்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், நேற்று அவருக்கு ஆதரவாக நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
உயிரிழந்த காதலி
இங்கிலாந்திலுள்ள Leicestershireஇல் வாழ்ந்துவந்த Ian Curson (42) தன் காதலியான Caragh Eaton (28)ஐ பிரிய முடிவு செய்துள்ளார்.
இருவரும் சிறிதுகாலம் பிரிந்திருந்த நிலையில், சமீபத்தில்தான் மீண்டும் இணைந்திருந்தனர். ஆனால், Caragh தன் காதலரைப் பிரிந்திருந்த நேரத்தில் வேறொரு ஆணுடன் பழகியுள்ளார். அவருக்கு Caragh அனுப்பிய குறுஞ்செய்திகள் தொடர்பில் Caraghவுக்கும் Ianக்கும் வாக்குவாதம் ஏற்பட, காதலியை நிரந்தரமாகப் பிரிவதென முடிவு செய்துள்ளார் Ian.
Image: PA
அவர் தனது காரில் ஏறி புறப்பட, அவரைத் தடுப்பதற்காக Caragh காரைப் பிடித்திருக்கிறார். ஆனாலும் நிற்காத Ian, Caraghவின் கையை விலக்கிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுள்ளார்.
சிறிது நேரத்திற்குப் பின், சரி Caraghவுடன் பேசலாம் என அவர் திரும்பி வரும்போது, காதலி வீட்டின் முன் ஏராளம் பொலிசார் நிற்கவே, காரை நிறுத்தாமல் சென்றுள்ளார் Ian.
கொலையா விபத்தா?
உண்மையில், Caragh உயிரிழந்துவிட்டிருக்கிறார். Ian தன் காதலியைக் கொலை செய்துவிட்டு தப்பிச் செல்வதாக நினைத்த பொலிசார் அவரைக் கைது செய்துள்ளார்கள்.
உயிரிழந்த Caraghவின் தலையில் இரண்டு பெரிய காயங்கள் இருந்ததால், அந்தக் காயங்கள் Ian தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் என்ற கோணத்தில் அவர் மீது கொலைக்வ்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விசாரணை நடந்துவந்தது.
இந்நிலையில், நீதிமன்றத்தில் தானே வாதிட்ட Ian, தான் Caraghவின் கையைப் பிடித்து அவரை பாதுகாப்பான தொலைவில் நிறுத்திவிட்டுத்தான் வந்ததாகவும், அவர் கீழே விழுந்ததே தனக்குத் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.
Image: Leicestershire Police
அத்துடன், தனக்கு தற்கொலை எண்ணங்கள் உண்டு என்பது Caraghவுக்குத் தெரியும் என்றும், தான் தற்கொலை செய்துகொள்வேனோ என அஞ்சியே அவர் பொலிசாரை அழைத்ததாகவும் எண்ணியே Caragh வீட்டுக்குத் திரும்ப வந்த தான், அதனால்தான் பொலிசாரைக் கண்டதும் காரை நிறுத்தாமல் திரும்பிச் சென்றதாகவும் Ian நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அவரது வாதத்தை நீதிபதிகளில் பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டதால், அவர் குற்றவாளி அல்ல என அவர்கள் தீர்ப்பளித்துள்ளனர். ஆகவே, Ian கொலைக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் தன் வீட்டுக்குத் திரும்புவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் நீதிபதிகள் கூறிவிட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |