தாயாருடன் சேர்ந்து 50 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய நிறுவனம்... இன்று அதன் மதிப்பு
விவேக் சாந்த் சேகல் 1975 ல் தனது தாயாருடன் சேர்ந்து மதர்சன் குழுமத்தை வெள்ளி வர்த்தக அமைப்பாக நிறுவினார்.
மகனுடன் இணைந்து
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, சேகல் 4.7 பில்லியன் அமெரிக்க டொலர் அல்லது ரூ.40967 கோடி சொத்து மதிப்புடன் அவுஸ்திரேலியாவின் பணக்கார இந்தியர் ஆவார்.
68 வயதான சேகல் தனது செல்வத்தின் பெரும்பகுதியை, முன்னர் மதர்சன் சுமி என்று அழைக்கப்பட்ட, வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் (SAMIL)-ல் இருந்தே பெறுகிறார்.
சேகல் தனது மகன் லக்ஷ் வாமன் சேகலுடன் இணைந்து மதர்சன் நிறுவனத்தை நடத்தி வருகிறார், அவர் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். மார்ச் 4ம் திகதி வெளியான தரவுகளின் அடிப்படையில் SAMIL நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 80,199 கோடி என்றே தெரிய வந்துள்ளது.
உலகளாவிய உற்பத்தியாளராக
இந்தியாவில் மதர்சன் சுமி வயரிங் இந்தியா என்ற நிறுவனத்தை சேகல் நிறுவியுள்ளார். இது ஒரு கூட்டு முயற்சி என கூறப்படும் நிலையில், இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் என BMW, Ford, Mercedes, Toyota மற்றும் Volkswagen என பட்டியலிடுகின்றனர்.
விவேக் சேகல் அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர். ஆனால் டெல்லி பல்கலைக்கழகத்திலேயே பட்டப்படிப்பை முடித்துள்ளார். மதர்சன் நிறுவனம் விண்வெளி உதிரிபாகங்களின் உலகளாவிய உற்பத்தியாளராகவும் உள்ளது. இது ஏர்பஸ் வணிக விமானங்களுக்கு டயர் 1 சப்ளையராக தெரிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |