கனடாவில் இலங்கையைச் சேர்ந்த 6 பேரைக் கொன்ற நபர்: ஆயுள் தண்டனை விதிப்பு

Sri Lanka Canada
By Balamanuvelan Nov 07, 2025 07:50 AM GMT
Report

கனடாவில் இலங்கையைச் சேர்ந்த 6 பேரைக் கொன்ற நபர் வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கனடாவுக்கு குடும்பத்தை அழைத்துக்கொண்ட இலங்கையர் 

கனடாவில் இலங்கையைச் சேர்ந்த 6 பேரைக் கொன்ற நபர்: ஆயுள் தண்டனை விதிப்பு | Man Get Life Prison For Kill 6 Srilankan In Canada

இலங்கையிலிருந்து கனடாவுக்கு வந்து பல ஆண்டுகள் தனிமையாக வாழ்ந்துவந்த தனுஷ்க விக்கிரமசிங்க, சில மாதங்களுக்கு முன்புதான் தன் மனைவியான தர்ஷனி ஏகநாயக (35), பிள்ளைகள் இனுக விக்ரமசிங்க (7), அஷ்வினி விக்கிரமசிங்க (4), ரினியானா விக்ரமசிங்க (2) ஆகியோரை கனடாவுக்கு அழைத்துவந்திருந்தார்.

அதற்குப் பின் கனடாவில் மகள் கெல்லி விக்கிரமசிங்க பிறக்க, குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்துள்ளது.

H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு

H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு

உதவியால் வந்த வினை

கனடாவில் கல்வி கற்க வந்த இலங்கையரான ஃபெப்ரியோ டி ஸோய்சா (19) என்பவர் தனக்கு தங்க இடம் இல்லை என்று கூறியபோது, அவரை தன் வீட்டு அடித்தளத்தில் தங்கிக்கொள்ளச் சொல்லியிருக்கிறார் தனுஷ்க.

இந்நிலையில், கடந்த ஆண்டு, மார்ச் மாதம் 6ஆம் திகதி, இரவு 11.00 மணியளவில் பணி முடித்து தனுஷ்க வீடு திரும்பும்போது வீடு அமைதியாக இருந்திருக்கிறது. ஏன் வீடு அமைதியாக இருக்கிறது என எண்ணியவாறே வீட்டுக்குள் நுழைந்த தனுஷ்கவை திடீரென மார்பிலும் முதுகிலும் கத்தியால் குத்தியுள்ளார் டி ஸோய்சா.

கனடாவில் இலங்கையைச் சேர்ந்த 6 பேரைக் கொன்ற நபர்: ஆயுள் தண்டனை விதிப்பு | Man Get Life Prison For Kill 6 Srilankan In Canada

காரணம் புரியாமல் திகைத்த தனுஷ்க, டி ஸோய்சாவைத் தடுக்க முயன்றதில் அவரது விரல்கள் கடுமையாக சேதமடைந்ததுடன், அவரது முகத்திலும் வெட்டு விழுந்திருக்கிறது.

அதற்குப் பிறகுதான் அவருக்குத் தெரிந்துள்ளது, தன் மனைவியையும் பிள்ளைகளையும், தங்கள் நண்பரான அமரகோன் (40) என்பவரையும் டி ஸோய்சா கொலை செய்துவிட்டார் என்பது.

கனடாவில் இலங்கையைச் சேர்ந்த 6 பேரைக் கொன்ற நபர்: ஆயுள் தண்டனை விதிப்பு | Man Get Life Prison For Kill 6 Srilankan In Canada

தனுஷ்க, சத்தமிட்டபடி பக்கத்து வீட்டுக்கு ஓடி உதவி கேட்க, அவர்கள் அவசர உதவியை அழைக்க, பொலிசார் வரும்போது கையில் இரத்தம் தோய்ந்த கத்தியுடன் வீட்டு வாசலில் அமைதியாக உட்கார்ந்துள்ளார் டி ஸோய்சா.

தான் சரியாக படிக்காததால் தனது மாணவர் விசா ரத்தாகிவிடும், இலங்கையிலிருக்கும் தனது குடும்பமும் பணம் அனுப்பாது என்றும் பயந்ததாக தெரிவித்த டி ஸோய்சா, தன்னை நாடுகடத்திவிடுவார்கள் என்றும், தான் இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்றும், ஆகவே, திட்டமிட்டு தனுஷ்க குடும்பத்தையும், அமரகோனையும் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கனடாவில் இலங்கையைச் சேர்ந்த 6 பேரைக் கொன்ற நபர்: ஆயுள் தண்டனை விதிப்பு | Man Get Life Prison For Kill 6 Srilankan In Canada

ஆயுள் தண்டனை

இரண்டு குடும்பங்களை மீளாத் துயரில் ஆழ்த்திய டி ஸோய்சா தன் குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவருக்கு தற்போது 25ஆண்டுகள் ஜாமீனில் வர இயலாத வகையில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US