மொத்தமாக ரூ 84000 கோடி சொத்துக்களை தோட்டக்காரருக்கு கொடுக்க திட்டமிட்டுள்ள கோடீஸ்வரர்: யார் அவர்?
சுவிட்சர்லாந்தை சேர்ந்த பிரெஞ்சு கோடீஸ்வரரான Nicolas Puech தமது மொத்த சொத்துக்களையும் தனது தோட்டக்காரருக்கு தானமாக அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமது வாரிசாக அறிவிக்க
தொடர்புடைய தோட்டக்காரர் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றாலும், அந்த 51 வயது நபரை தமது வாரிசாக அறிவிக்க Nicolas Puech முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Nicolas Puech என்பவரின் மொத்த சொத்துமதிப்பு என்பது இந்திய மதிப்பில் சுமார் ரூ 84,000 கோடி அல்லது 9 முதல் 10 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் என்றே கூறப்படுகிறது.
தற்போது தமது சொத்துக்களை தோட்டக்காரருக்கு கைமாறும் பொருட்டு சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடீஸ்வரரான Nicolas Puech என்பவர் Hermes நிறுவனரான Thierry Hermès என்பவரின் பேரன் எனவும், ஐந்தாம் தலைமுறை வாரிசு எனவும் கூறப்படுகிறது.
இவர் தற்போது மதிப்புமிக்க மொராக்கோ குடும்பத்தை சேர்ந்த முன்னாள் தோட்டக்காரரும் கைவினைஞருமான 51 வயது நபரை தமது உத்தியோகப்பூர்வ மகனாக அறிவிக்க முடிவு செய்துள்ளார்.
குடும்ப உறுப்பினர்களுடன் மனக்கசப்பு
Hermes குழுமத்தின் 200 பில்லியன் டொலர் சொத்துக்களில் 5 அல்லது 6 சதவீத உரிமையை தமது வாரிசுக்கு கைமாற இருக்கிறார் Nicolas Puech. அந்த தோட்டக்காரரின் பெயர் தற்போது வெளியிடப்படவில்லை, ஆனால் அவர் ஒரு ஸ்பானிஷ் பெண்ணை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தந்தை என்று தெரிவிக்கப்படுகிறது.
80 வயதான Nicolas Puech-ன் சொத்துக்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு சொத்துக்களை அந்த தோட்டக்காரர் இனி அனுபவிக்க இருக்கிறார். மட்டுமின்றி, சுவிட்சர்லாந்திலும் மொராக்கோவிலும் தமக்கு சொந்தமான குடியிருப்புகளை தோட்டக்காரரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், அதன் மதிப்பு 5.9 மில்லியன் அமெரிக்க டொலர் எனவும் கூறப்படுகிறது.
குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகவே Nicolas Puech தமது வாரிசாக தோட்டக்காரரை தெரிவு செய்துள்ளதாகவும், Nicolas Puech திருமணம் செய்துகொள்ளாதவர் என்பதால் இந்த முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |