வாழைப்பழம் வாங்க சென்றவருக்கு வாழ்க்கையே மாறிய அதிசயம்
அமெரிக்காவில் வாழைப்பழம் வாங்க கடைக்கு சென்றபோது வாழ்க்கையே மாறும் வகையில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலத்தில் வசிக்கும் ஷெர்மன் மோர்னிங் (Sherman Morning) என்பவர், சாதாரணமாக வாழைப்பழமும் ஆப்பிள் சாஸும் வாங்க செல்கையில், அவரின் வாழ்க்கையே மாற்றம் அடைந்துள்ளது.
நியூபோர்ட் நியூஸ் நகரில் உள்ள Food Lion மளிகைக் கடையில், 5 டொலர் செலுத்தி $100,000 Extreme Cash லொட்டரி சீட்டைப் பெற்றார்.
அதிர்ஷ்டவசமாக அதில் வெற்றி பெற்ற ஷெர்மனுக்கு $100,000 (இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட 3 கோடி ரூபா) பரிசாக கிடைத்துள்ளது.
லொட்டரி அதிகாரிகளின் தகவலின்படி, இது இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய விளையாட்டின் முதல் முதன்மை பரிசு ஆகும். மொத்தம் மூன்று பாரிய பரிசுகள் உள்ளன, இதில் முதல் பரிசை ஷெர்மன் மோர்னிங் வென்றுள்ளார்.
ஷெர்மன் மோர்னிங் தனது பரிசைப் பெற்றபோது, "இது ஒரு மிக நல்ல அனுபவம்!" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |