பிரித்தானியாவில் பிஞ்சு குழந்தையை கொலை செய்ய 21 வயது நபர் போட்ட திட்டம்! வெளியான பல திடுக்கிடும் உண்மைகள்
பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட நபர், குழந்தைக்கு விஷம் வைத்து கொடுப்பது எப்படி என்பதை கூகுளில் தேடியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவின் Birmingham-ல் உள்ள Winson Green பகுதியைச் சேர்ந்தவர் Jamar Bailey.
21 வயது மதிக்கத்தக்க இந்த நபர் குழந்தைக்கு விஷம் கொடுத்த கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, தற்போது அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த ஆண்டு ஜுன் மாதம் 21 வயது மதிக்கத்தக்க Jamar Bailey, என்பவர் மூன்று வார குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு, குழந்தையிடம் எந்த ஒரு அசைவும் இல்லை, என்ன ஆனது என்றே தெரியவில்லை என மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட, பொலிசார் சந்தேகத்தின் பேரின் Jamar Bailey-ஐ கைது செய்தனர்.
ஏனெனில், மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட குழந்தையின் சிறுநீரகத்தில், கால்-கை வலிப்புக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் Sodium valproate என்ற மருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், துப்பறியும் அதிகாரிகள் அவருடைய வீட்டில் நடத்திய சோதனையில், குழந்தைக்கு கொடுக்கப்பட்ட பால் பாட்டிலில், அதற்கான ஆதாரங்கள் இருந்துள்ளது.
அதுமட்டுமின்றி, அவருடைய போனை ஆராய்ந்து பார்த்த போது, அதில் குழந்தைக்கு விஷம் கொடுப்பது எப்படி, பிறந்த குழந்தையை கொல்வது எப்படி போன்ற விஷயங்களை கூகுளில் தேடியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து குழந்தையை வேண்டும் என்றே தீங்கு விளைவித்த குற்றசாட்டின் பேரில் பொலிசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அப்போது அவர் குழந்தையை கொலை செய்ய முயற்சித்ததை ஒப்புக் கொண்டார்.
இது குறித்து துப்பறியும் அதிகாரி, Sergeant Kirsty Wilson கூறுகையில், குழந்தை தற்போது உயிருடன் பாதுகாப்பாக இருக்கிறது.
இது உண்மையிலே ஒரு அதிர்ஷ்டக்கார குழந்தை என்றே கூறுவேன். குழந்தை காப்பாற்றப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது எல்லாம் முன்பே திட்டமிட்டு அனைத்தையும் Jamar Bailey செய்துள்ளான்.
தற்போது அவருக்கு நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததில் திருப்தி அடைகிறோம்.
பரோல் பெற வேண்டும் என்றால் கூட, தன்னுடைய சிறை தண்டனையில் மூன்றில் இரண்டு பங்கை அனுபவித்தால் மட்டுமே குற்றவாளிக்கு பரோல் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.