தந்தையைப் போலவே தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!
வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 26 வயது இளைஞர்
தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரைப் போலவே மகன் பாலாஜியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கிருஷ்ணமூர்த்தியின் 26 வயது மகன் பாலாஜி தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து செய்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது பாலாஜி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Representational image
அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே பாலாஜி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.