கரடியிடம் ஒரு வாரமாக தனியாக மாட்டிக்கொண்ட நபர்! அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம்
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஒருவார காலமாக பயங்கரமான கரடியிடம் தனியாக மாட்டிக்கொண்டு அவதிப்பட்டுவந்த ஒரு நபரை கடலோரக்காவல்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
அலாஸ்காவில் கோடியாக் (Kodiak) பகுதியைச் சேர்ந்த அமெரிக்க கடலோர காவல் படையினரின் ஒரு குழு, நேற்றுஹெலிகாப்டர் மூலமாக, Kotzebue-வில் இருந்து Nome-க்கு சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில், ஒரு சிறிய கூடாரத்துக்கு மேல் 'SOS' என்ற அவசர உதவி குறிப்பை பார்த்துள்ளனர்.
அதனால், மீண்டும் அந்த வழியே திரும்பி வந்தபோது, ஒரு தனிநபர் அந்த கூடாரத்தின் மேல் நின்று, தன்னை காப்பாற்றும்படி கைகளை அசைத்துக்கொண்டிருந்தார். உடனடியாக அவர் அங்கிருந்து மீட்கப்பட்டார்.
அவரது காலில் பலமாக அடி பட்டிருந்தது, மேலும் அவரது உடல் முழுக்க பல இடங்களில் பயங்கரமாக கீறல்களும் காயங்களும் இருந்தன.
அவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு கரடியால் தாக்கப்பட்டதாகவும், ஒரு வாரமாக அந்த கூராத்தில் தனியாக மாட்டிக்கொண்டு இருந்ததாகவும் கூறினார்.
மேலும் ஒவ்வொரு நாளும் இரவு முழுவதும் அந்த கரடி அங்கு வந்து அவரை கொள்ள முயன்றதாக கூறினார்.
கடலோரக் காவல் படையினர் அவரை Nome-ல் உள்ள சிறிய விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022