வீட்டைப் பார்த்துக்கொள்ளும்படி நண்பரிடம் கூறிவிட்டு வெளிநாடு சென்ற நபர்: திரும்பிவந்தபோது காத்திருந்த அதிர்ச்சி
தன் வீட்டைக் கவனித்துக்கொள்ளும்படி நண்பர் ஒருவரிடம் கூறிவிட்டு, அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு சென்றார் சுவிஸ் நாட்டவர் ஒருவர். அவர் திரும்பிவந்தபோது, பெரிய அதிர்ச்சி ஒன்று அவருக்குக் காத்திருந்தது.
காத்திருந்த அதிர்ச்சி
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் வாழ்ந்துவந்த ஒருவருக்கு, முதுகில் அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொள்வதற்காக துருக்கி நாட்டுக்குச் செல்ல வேண்டிவந்தது.
அவர் ஒரு செல்லப்பிராணியை வளர்த்துவருகிறார். ஆகவே, அதற்கு உணவளிக்கக் கோரி தன் நண்பர் ஒருவரிடம் கேட்டுக்கொண்டு வீட்டு சாவியை அவரிடம் கொடுத்துள்ளார்.
அறுவை சிகிச்சை முடிந்து, இரண்டு வாரங்களுக்குப்பின் வீடு திரும்பிய அவர், தன் வீட்டில் வேறு ஒரு குடும்பம் வாழ்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பொலிசார் மறுப்பு
பொலிசாரிடம் அவர் இது குறித்து புகாரளிக்க, அந்த வீட்டில் தங்கியிருப்பவர்களை காலி செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என அவர்கள் கூறிவிட்டிருக்கிறார்கள்.
ஆக, நீதிமன்றம் செல்வதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. பிரச்சினை என்னவென்றால், நீதிமன்றத்தில் வழக்கு முடிய மூன்று மாதங்கள் வரை ஆகும். அதுவரை, வீடற்றவராக வாழும் நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.
பிரச்சினை அதுமட்டுமில்லை, அவரது வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் மாயமாகியுள்ளதுடன், அவரது நண்பரும் மாயமாகிவிட்டார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |