டெல்லியில் காற்று மாசுபாட்டால் மார்பை பிடித்துக் கொண்டு அவதிப்பட்ட நபர்.., அதிர்ச்சி வீடியோ
தீபாவளிக்கு அடுத்த நாட்களில் டெல்லியில் காற்று மாசுபாடு மோசமடைந்து (AQI) பல குடியிருப்பாளர்களுக்கு "வாழ முடியாத" அளவை எட்டியுள்ளது.
அதிர்ச்சி வீடியோ
அக்டோபர் 22 ஆம் திகதி வெளியான ஒரு வீடியோவானது, டெல்லியில் ஒரு தம்பதியினர் நகரின் நச்சுக் காற்றின் கடுமையான விளைவுகளை எதிர்கொள்வதைக் காட்டுகிறது.
ஆனந்த் விஹாரில் தனது மனைவியுடன் ஸ்கூட்டரில் சென்ற ஒருவருக்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. மார்பைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் அவருக்கு அவரது மனைவி உதவி தேடுகிறார்.
அவரது மனைவி பயந்துபோய் அருகில் இருந்தவர்களிடம் தண்ணீர் கேட்பதைக் காணலாம். இந்த வீடியோவை ஜியா மோட்டோ டிராவல் ஹைக்கிங் (@zia_moto_) இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
அந்த பதிவில், "ஆனந்த் விஹாரில் தனது மனைவியுடன் ஸ்கூட்டரில் சென்றபோது ஒருவர் மயக்கமடைந்து மூச்சுத் திணறல் மற்றும் மார்பு வலி இருப்பதாக கூறினார்.

நான் அவரது குடும்ப உறுப்பினர்களை அழைத்ததால் அவர்கள் வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு, ஆனந்த் விஹார் அதிகபட்சமாக 401 AQI-ஐ பதிவு செய்தது, அதைத் தொடர்ந்து புராரி 335 மற்றும் அசோக் விஹார் 322 ஆக இருந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |