பிரித்தானியாவில் இறுதிச் சடங்கு நிறுவனத்தில் ஊழல்: 64 குற்றச்சாட்டுகளுடன் சம்பந்தப்பட்டவர் கைது
பிரித்தானியாவின் ஹல் நகரில் உள்ள லெகசி இன்டிபெண்டன்ட் ஃபியூனரல் டைரக்டர்ஸ்(Legacy Independent Funeral Directors) நிறுவனத்தில் நடந்த அதிர்ச்சியூட்டும் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதாவது இறந்தவர்களின் உடல்களை முறைகேடாக கையாண்டது தொடர்பாக, ஹம்பர்சைட் காவல்துறை நபர் ஒருவர் மீது 64 குற்றச்சாட்டுகளுடன் கைது செய்துள்ளது.
இது தொடர்பான விசாரணையில் 2024 மார்ச் மாதம் தொடங்கிய இந்த விசாரணையில், இறந்தவர்களின் பராமரிப்பு குறித்து அதிகாரிகள் திடுக்கிடும் தகவல்களை பெற்றுள்ளனர்.
ராபர்ட் புஷ் கைது
கிழக்கு யார்க்ஷயரின் கிர்க் எல்லாவைச் சேர்ந்த ராபர்ட் புஷ் (47) என்பவர் ஹம்பர்சைட் காவல்துறையின் 10 மாத தீவிர விசாரணையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது 30 சட்டவிரோத மற்றும் கண்ணியமற்ற அடக்க குற்றச்சாட்டுகள், 30 மோசடி குற்றச்சாட்டுகள், இரண்டு தொண்டு நிறுவனத் திருட்டு, 172 நபர்களை பாதிக்கும் மோசடி வணிக குற்றச்சாட்டு, 50 பாதிக்கப்பட்டவர்களை பாதிக்கும் மனித சாம்பல் மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
இந்த ஊழலில் 252 நபர்கள் மற்றும் இரண்டு தொண்டு நிறுவனங்கள் உட்பட மொத்தம் 254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதிச் சடங்கு நிறுவன வளாகத்தில் காவல்துறை நடத்திய சோதனையில் 35 உடல்கள் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட ராபர்ட் புஷ், ஜூன் 25 ஆம் திகதி ஹல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அவர் தற்போது நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |