4 மாதங்களாக காரில் இருந்த லொட்டரி சீட்டை கவனிக்காமல் இருந்த நபர்.., மகன் மூலமாக அடித்த பேரதிர்ஷ்டம்
4 மாதமாக காரில் கவனிக்காமல் இருந்த லொட்டரி டிக்கெட்டை எடுத்து பார்த்த நபருக்கு ரூ.10 கோடி மேல் பரிசு விழுந்துள்ளது.
மகனால் வந்த அதிர்ஷ்டம்
லொட்டரி சீட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு, இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் 1 மில்லியன் பவுண்டுகள் (ரூ. 11 கோடிக்கு மேல்) வென்றதைக் கண்டுபிடித்தார்.
தி மெட்ரோ வெளியீட்டின் அறிக்கையின்படி, டேரன் பர்ஃபிட் என்ற அந்த நபர் தனது காரில் விட்டுச் சென்ற டிக்கெட்டைக் கண்டபோது பரிசு விழுந்ததை அறிந்தார்.
ஸ்வான்சியாவைச் சேர்ந்தவர் 44 வயதான டேரன் பர்ஃபிட். இவர் லாங்லேண்ட் பே கோல்ஃப் கிளப்பின் பராமரிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இவர், 4 மாதங்களுக்கு முன்பாக லொட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். ஆனால், அவற்றைச் சரிபார்க்க அவருக்கு நேரம் கிடைக்கவில்லை.
இவர் பல மாதங்களாக தனது காரில் பல லொட்டரி சீட்டுகளை வைத்திருந்தார். தனது நான்கு வயது மகன் காரில் இருந்த சிற்றுண்டியைக் கேட்டபோது தற்செயலாக டிக்கெட்டைக் கண்டார்.
எப்போதும் பாதுகாப்பிற்காக அவற்றை காரில் தான் வைத்திருப்பாராம். அவற்றைச் சரிபார்க்க அவருக்கு நேரம் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவர் கூறுகையில் "என் மகன் ஒரு பாக்கெட் சிப்ஸ் கேட்டார். அப்போது நான் ஒரு புதிய பாக்கெட்டை திறக்க விரும்பவில்லை. அந்த நேரத்தில் பாதி திறந்த சிப்ஸ் பாக்கெட் காரில் இருப்பதை அறிந்தேன்.
எனவே, நான் வெளியே வந்து காரில் இருந்து அதை அவனுக்குக் எடுத்து வருவதாக சொன்னேன். அப்போது தான் காரில் இருந்த லொட்டரி டிக்கெட்டையும் எடுக்க முடிவு செய்து அவற்றை சரிபார்த்தேன். அப்போது தான் எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
லொட்டரி டிக்கெட் ஒன்றில் மில்லியன் பவுண்டுகள் விழுந்தது தெரிந்தது. என்னால் அதை முழுமையாக நம்ப முடியவில்லை. உண்மையில், இப்போதும் என்னால் அதை நம்ப முடியவில்லை" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |