மனைவிக்கு பிறந்த 13 வயது மகனிடம் அத்துமீறிய நபர்! இருவருக்கும் பிறந்த மற்றொரு மகன்.. தலைசுற்றவைக்கும் அதிர்ச்சி பின்னணி
அமெரிக்காவில் 13 வயது சிறுவனை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Baton Rouge நகரை சேர்ந்த 46 வயதான Alvah Davis என்பவரே கைது செய்யப்பட்டவர் ஆவார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் அளித்த புகாரில், என்னுடைய 13 வயது மகனை இரண்டு மாதங்களாக பலமுறை Davis பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
நான் இல்லாத போது என் வீட்டில் தான் இவையெல்லாம் நடந்தது என குறிப்பிட்டுள்ளார். இதனிடையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் Davis குறித்து தலைசுற்றவைக்கும் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயாரின் மற்றொரு 5 வயதான மகனுக்கு Davis தான் தந்தை எனவும் அந்த குடும்பத்தை பல வருடங்களாக அவருக்கு தெரியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவனுடன் தடயவியல் நேர்காணல்கள் முடிந்த பின்னரே Davis மீது கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
தற்போது வரை Davis ஜாமீன் தொடர்பில் இந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.