மகளை கடித்த நண்டு…உயிருடன் சாப்பிட்டு பழிதீர்த்த சீன தந்தை: ஒட்டுண்ணிகள் தொற்றால் அவதி
மகளை கடித்த நண்டினை பழிவாங்குவதற்காக அதை உயிருடன் முழுவதுமாக சாப்பிட்ட 39 வயதுடைய லு(Lu) என்ற தந்தை.
இரத்தத்தில் குறைந்தது மூன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுண்ணிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
சீனாவில் மகளை கடித்தற்கு பழிவாங்குவதற்காக நண்டு-வை உயிருடன் சாப்பிட்ட தந்தைக்கு பயங்கரமான நோய் தொற்று ஏற்பட்டு, உடல்நல குறைவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு சீன பகுதியில் உள்ள Zhejiang-கில் 39 வயதுடைய லு(Lu) என்ற தந்தை, அவரது மகளை கடித்த நண்டினை பழிவாங்குவதற்காக அதை உயிருடன் முழுவதுமாக சாப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் நடந்து முடிந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு, லு-விற்கு கடுமையான முதுகு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது லு-வை மருத்துவ சோதனை செய்ததில் அவருக்கு நெஞ்சு, வயிறு, கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தில் நோயியல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது, ஆனால் மருத்துவர்களுக்கு அதற்கான காரணம் தெளிவாக கண்டறிய முடியாத நிலையில், லு-விடம் வழக்கத்திற்கு மாறான செயல்கள் எதுவும் நடத்தனவா என்று மருத்துவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆனால் அது போன்று எதுவும் நடைபெறவில்லை என லு மீண்டும் மீண்டும் பதிலளித்தார், இறுதியில் லு-வின் மனைவியே நண்டினை உயிருடன் சாப்பிட்ட நிகழ்வை மருத்துவர்களிடம் தெரிவிக்க, அதனை லு-வும் ஒப்புக் கொண்டார் என மருத்துவமனையின் செரிமான அமைப்பு துறையின் இயக்குனர் டாக்டர் காவ் கியான் தெரிவித்ததாக தென் சீனா மார்னிங் போஸ்ட்டில் (SCMP) தெரிவிக்கப்பட்டுள்ளது.
Photo: toutiao.com
மருத்துவர்கள் லு-விடம் எதற்காக நண்டினை உயிருடன் சாப்பிட்டீர்கள் என கேட்டதற்கு, தனது மகளை அது கடித்ததாகவும், அதற்கு பழிவாங்கவே உயிருடன் அதை சாப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரது இரத்ததை பரிசோதனைக்கு அனுப்பிய மருத்துவர்கள், அவரது இரத்தத்தில் குறைந்தது மூன்றுக்கும் மேற்பட்ட ஒட்டுண்ணிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து லு-வுக்கு வழங்கப்பட்ட தொடர் சிகிச்சைக்கு பிறகு, அவர் மருத்துவமனையில் இருந்து அனுப்பட்டார், இருப்பினும் தொடர்ச்சியான பரிசோதனைகளுக்கு வருகை தருமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைன் மீது பாய்ந்த 4500 ஏவுகணைகள்: ரஷ்ய கீதம் ஒலிப்பது இதைவிட ஆபத்தானது
தி டெலிகிராப் படி, நண்டு சாப்பிடுவது சீனா முழுவதும் பொதுவானது. ஓட்டுமீன்கள் பெரும்பாலும் சமைத்து உண்ணப்பட்டாலும், சில பிராந்தியங்களில், குறிப்பாக கிழக்கு சீனாவில் இது பச்சையாக வழங்கப்படுகிறது.