பிரித்தானியாவில் அருவருப்பான செயலை செய்து பொலிஸை மிரட்டிய நபருக்கு நேர்ந்த கதி!
பிரித்தானியாவில் வீட்டிற்கு வந்த பொலிஸை அருவருப்பான செயலை செய்து மிரட்டிய நபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
பெர்த்தைச் சேர்ந்த 38 வயதான Albert McCafferty என்ற நபரே பொலிஸை மிரட்டியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஊரடங்கு தொடக்கத்தில் வடக்கு மியூர்டனில் உள்ள Albert McCafferty வீட்டிற்கு பொலிஸார் சென்றுள்ளனர்.
அப்போது, பொலிசாரை எதிர்த்த Albert McCafferty, கையால் மூக்கை சிந்தி சளியை வெளியே எடுத்து, எனக்கு கொரோனா இருக்கிறது, உங்கள் மேல் சாளியை தடவி விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால், பொலிஸாருக்கு சம்பவயிடத்திற்கு கூடுதல் காவல்துறை அதிகாரிகளை அழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான Albert McCafferty, பொலிசாரை மிரட்டும் விதத்தில் நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட Albert McCafferty-க்கு இந்த மாதம் இறுதி வரை தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தான் செய்த குற்றத்திற்காக Albert McCafferty சிறை தண்டனை எதிர்கொள்ள நேரிடும் என கூறப்படுகிறது.