மதுபோதையில் தன்னை கடித்த நாக பாம்பின் தலையை கடித்த நபருக்கு தீவிர சிகிச்சை
மது போதையில் இருந்த நபர் ஒருவர் தன்னை கடித்த நாக பாம்பின் தலையை கடித்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீவிர சிகிச்சையில் போதை நபர்
இந்திய மாநிலமான ஆந்திரப்பிரதேசம், திருப்பதியில் உள்ள பேடு மண்டலம் சிய்யாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (48).
இந்த கிராமத்தில் உள்ள கங்கையம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றுக் கொண்ட நேரத்தில் இரவில் மது அருந்திவிட்டு போதையில் சென்றுள்ளார் வெங்கடேஷ்.
அப்போது, நாக பாம்பு ஒன்று அவரது காலை கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் தன்னை கடித்த பாம்பை பிடித்து அதன் தலையை கடித்து துப்பியுள்ளார்.
இதையடுத்து, இறந்த பாம்பின் உடலுடன் வீட்டிற்கு சென்ற வெங்கடேஷ் உறங்கிவிட்டார் . பின்னர், காலையில் அவர் மயக்கமடைந்து கிடப்பதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அப்போது அவரது அருகில் இறந்த பாம்பும் கிடந்துள்ளது.
தற்போது, வெங்கடேசுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |