இரண்டரை கோடி ரூபாயை அள்ளி கொடுத்த இலங்கையர்! எதற்காக தெரியுமா? நெகிழ்ச்சி புகைப்படங்கள்
கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு இலங்கையர் ஒருவர் இரண்டரை கோடி ரூபாய் பகிர்ந்தளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்று வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், கடந்த 20ம் திகதி முதல் வரும் 30ம் திகதி வரை நாட்டில் முடக்க நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேலை இழந்து பல மக்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வருமானமின்றி வாடும் மக்களுக்கு தனது சொந்த நிதியில் தலா ஒருவருக்கு ரூ. 1,000 வழங்கும் திட்டமொன்றை இலங்கையர் ஒருவர் தொடங்கியிருக்கிறார்.
கொழும்பின் களனி பகுதியைச் சேர்ந்த மஞ்சுள பெரேரா இந்த நிதிக் கொடையை வழங்குகிறார். இவர் அரசியல் செயற்பாடுகளை செய்து வருவதோடு, தொழிலதிபராகவும் உள்ளார்.
அவர் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில், இந்த திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ரூபாய் இரண்டரை கோடியை ஒதுக்கியுள்ளேன். ஆரம்ப கட்டத்தில் மூன்று கொள்கலன்களின் அரிசி மூட்டைகளை கொண்டு வந்து, மக்களுக்கு பகிர்ந்தளித்தேன்.
இதோடு உலர் உணவுப் பொருட்களை மக்களுக்கு விநியோகித்துள்ளதாகவும் வரும் காலங்களிலும் தொடர்ந்து இது போன்ற உதவிகளை செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.