பிரித்தானியாவில் தோழியை கிண்டல் செய்த பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்: ஆண் நண்பருக்கு சிறை
பிரித்தானியாவில் தனது தோழியை கிண்டல் செய்தவர்களை தாக்கிய குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு 13 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கழுத்து எழும்பு முறிவு
கடந்த 2022ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் ஈவ் அன்று, டேர்ரென் குய்ல்ட் என்ற நபர் பெண்ணொருவரை கடுமையாக தாக்கியுள்ளார்.
தனது தோழி சாம்பல் நிற ஜாக்கெட் அணிந்திருந்ததைப் பார்க்கும்போது கர்ப்பிணி போல் உள்ளதாக குறித்த பெண்ணும், அவரது நண்பரும் கிண்டல் செய்துள்ளனர்.
இதன் காரணமாகவே கோபமடைந்த குய்ல்ட் அந்நபரை தாக்கும்போது, சமாதானப்படுத்த முயன்ற அவரது தோழியின் முகத்திலும் குத்தியுள்ளார்.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த குறித்த பெண்ணுக்கு கழுத்து எழும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அவ்வழியாக சென்ற காவல் அதிகாரி ஒருவர், உடனடியாக டேர்ரென் குய்ல்ட்டை கைது செய்துள்ளார்.
13 மாத சிறைத்தண்டனை
அப்போது அவர் மதுபோதையில் இருந்துள்ளார். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட டேர்ரென் குய்ல்ட் அளித்த விவரங்கள் தவறானவை என தெரிய வந்தது.
அவர் வேறு காரணங்களுக்காக பிணை நிபந்தனை விதிக்கப்பட்டிருந்ததால் அவ்வாறு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் டேர்ரென் குய்ல்ட் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால், வால்வர்ஹாம்ப்டன் கிரவுன் நீதிமன்றம் 13 மாத சிறைத்தண்டனை விதித்தது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண் காயங்கள் குணமாகும் வரை வேலை செய்ய முடியாததால் வருமானத்தை இழந்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |