கணவன்-மனைவி சண்டை: சமாதானப்படுத்திய நபருக்கு கத்திக்குத்து: நீதிமன்றம் வழங்கிய தண்டனை
பிரித்தானியாவில் உள்ள பிளமிங்கோ ரிசார்ட்டில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு 4.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரிசார்ட்டில் நடந்த கத்திக்குத்து
வடக்கு யார்க்ஷயரில் உள்ள பிளமிங்கோ லேண்ட் ரிசார்ட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் 18ம் திகதி அதிகாலை 1 மணியளவில் டொனெல்லி என்ற நபருக்கும் அவரது மனைவிக்கும் சண்டை அதிகரித்துள்ளது.
அப்போது அங்கிருந்த 38 வயது ஸ்காட்டிஷ் பார்டர்ஸை சேர்ந்த நபர், அவர்களது சண்டையை சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளார்.
இதனால் கோபமடைந்த டொனெல்லி சமையலறையில் இருந்த 4 அங்குல கத்தியை எடுத்து அந்த நபரின் வயிற்றில் மூன்று முறை குத்தினார்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அந்த நபர் தீவிர மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
கைது மற்றும் நீதிமன்ற தண்டனை
தாக்குதல் நடத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடிய டொனெல்லி, கிளீவ்லேண்ட் காவல் எல்லை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை யார்க் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
விசாரணையில் தன் மீது சுமத்தப்பட்ட நோக்கத்துடன் காயப்படுத்துதல் என்ற குற்றச்சாட்டை மிடில்ஸ்பரோவை சேர்ந்த ஜோசுவா டொனெல்லி ஒப்புக் கொண்டதை அடுத்து அவருக்கு 2026 ஜூன் 12ம் திகதி வெள்ளிக்கிழமை அவருக்கான தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், 22 வயது டொனெல்லி-க்கு 4 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |