பாரிஸ் ஈபிள் கோபுரத்தில் இருந்த குதித்த மர்ம நபர்: பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை
பிரான்ஸ் ஈபிள் கோபுரத்தில் இருந்து குதித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஈபிள் கோபுரத்தில் இருந்து குதித்த நபர்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தளமான ஈபிள் கோபுரத்தின்(Eiffel Tower) உச்சியில் இருந்த நபர் ஒருவர் பாராசூட் உடன் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்ந்த மலையேறியான அந்த நபர், அதிகாலை 5 மணிக்கு சிறிது நேரத்திற்கு பிறகு, ஈபிள் கோபுரம் திறக்கப்படுவதற்கு முன்பே உள்நுழைந்து கோபுரத்தின் 330 மீட்டர் உயரத்தில் இருந்து பாராசூட் உடன் குதித்துள்ளார்.
அந்த நபரின் செயலை உடனடியாக காவலர்கள் அறிந்து கொண்டனர் என தளத்தின் ஆபரேட்டர் Sete தெரிவித்துள்ளது, இருப்பினும் காவலர்கள் அவரை தடுக்கும் முன் அந்த நபர் மேலே ஏறிச் சென்று விட்டதாக Sete குறிப்பிட்டுள்ளது.
கைது செய்த பொலிஸார்
இந்நிலையில் ஈபிள் கோபுரத்தில் இருந்து குதித்த நபர் அருகில் உள்ள மைதானத்தில் இறங்கிய நிலையில், மக்களின் உயிரை ஆபத்தில் தள்ளிய குற்றத்திற்காக பொலிஸார் அவரை கைது செய்தனர்.
இது தொடர்பாக Sete வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவரின் செயல் ஈபிள் கோபுரத்திற்கு கீழே பணிபுரியும் வேலை ஆட்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |