இளம்பெண்ணை கடத்தி துண்டு துண்டாக வெட்டி வீசிய இளைஞர்! விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி காரணம்
இந்திய மாநிலம் கேரளாவில் கடனை திருப்பிக் கேட்ட இளம்பெண்ணை கடத்திச் சென்று, கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கடன் கொடுத்த இளம்பெண்
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பாலக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் சனல். இவரது மனைவி ஆதிரா (27) அங்கமாலியில் உள்ள ஒரு வணிக அங்காடியில் பணியாற்றி வந்தார்.
இவருடன் நண்பரான அகில் (31) அதே அங்காடியில் வேலை பார்த்துள்ளார். அவருக்கு பணம் தேவைப்படும்போது ஆதிரா நண்பர் என்ற முறையில் உதவி வந்துள்ளார்.
இந்த நிலையில் தான் கொடுத்த பணத்தை ஆதிரா திருப்பி கேட்டதால், அகிலுக்கும் அவருக்கும் இடையியேயே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த 29ஆம் திகதி ஆதிரா காணாமல் போனதால், அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய பொலிஸார், ஆதிராவின் செல்போன் மூலம் தீவிரப்படுத்தியுள்ளனர்.
உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய இளைஞர்
கடைசியாக அகிலுடன் ஆதிரா பேசியது தெரிய வந்த நிலையில், 29ஆம் திகதி அவரை அகில் காரில் அழைத்து சென்றதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
அதன்படி அகிலைப் பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர் ஆதிராவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். ஆதிராவின் கழுத்தை நெரித்துக் கொன்ற பின்னர், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசியுள்ளார்.
உடனே ஆற்றுப்பகுதிக்கு சென்ற பொலிஸார் ஆதிராவின் உடல் பாகங்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அகிலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
iStock