ஒரு வாய் பட்டர் சிக்கன் சாப்பிட்ட பிரித்தானியர்: அடுத்து நடந்த துயரம்
பிரித்தானியாவில் பட்டர் சிக்கன் சாப்பிட்ட இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
பட்டர் சிக்கன் சாப்பிட்ட இளைஞர் பலி
இங்கிலாந்திலுள்ள Bury என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த ஜோசப் (Joseph Higginson, 27) என்னும் இளைஞர், பட்டர் சிக்கன் சாப்பிட்டு உயிரிழந்த விடயம் தொடர்பாக நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது.
2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், 28ஆம் திகதி, ஜோசப் பட்டர் சிக்கன் ஆர்டர் செய்துள்ளார். குடும்பமாக அனைவரும் சேர்ந்து சாப்பிட அமர்ந்த நேரத்தில், ஜோசப் அந்த பட்டர் சிக்கனில் ஒரு வாய் சாப்பிட்டதுமே சுருண்டு விழுந்துள்ளார்.
Image: MEN/UGC
உடனடியாக முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் ஜோசப் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 4ஆம் திகதி, அதாவது, சுமார் ஒரு வாரத்துக்குள் உயிரிழந்துவிட்டார்.
காரணம் என்ன?
ஜோசப் மரணம் தொடர்பாக, நீதிமன்ற விசாரணை அதிகாரிகள், நேற்று முன்தினம், அதாவது, வியாழக்கிழமை, நீதிமன்றத்தில் விளக்கமளித்தார்கள்.
விடயம் என்னவென்றால், ஜோசப்புக்கு Nut allergy என்னும் பிரச்சினை இருந்துள்ளது. அதாவது, வேர்க்கடலை, பாதாம், தேங்காய் போன்றவற்றை சாப்பிட்டால் அவருக்கு ஒவ்வாமை ஏற்படும். அதனால் அவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம் என மருத்துவர்கள் ஏற்கனவே எச்சரித்திருக்கிறார்கள்.
விபரீத விளையாட்டு
ஆனால், எச்சரிக்கையையும் மீறி, ஒன்றிரண்டு முறை பாதாம் கலந்த உணவை சாப்பிட்டிருக்கிறார் ஜோசப். அப்போது அவருக்கு ஒவ்வாமை ஏற்படவில்லையாம்.
அதனால் அவர் இன்னொரு முறை சாப்பிட்டுப்பார்க்கலாம் என பாதாம் கலந்த பட்டர் சிக்கனை சாப்பிட, இம்முறை ஒவ்வாமை தாக்கியிருக்கிறது.
மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார் ஜோசப். இந்நிலையில், ஒவ்வாமை உள்ளவர்கள் இதுபோல் விபரீத விளையாட்டுகளில் ஈடுபடவேண்டாம் என எச்சரிக்கிறார் ஜோசப்பின் சகோதரியான எமிலி (Emily, 32).
ஆக, இந்த செய்தியில் கவனிக்கவேண்டிய இன்னொரு விடயம், பிரச்சினை பட்டர் சிக்கனில் இல்லை, அது, அந்த உணவில் சேர்க்கப்பட்டிருந்த பாதாமில் இருந்துள்ளது. அதுவும் ஒவ்வாமை என தெரிந்தும் அதை உண்டதால்தான் ஜோசப் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |