காதில் கேட்ட அசரீரி: சுவிஸில் சொந்த தாயாரை கொடூரமாக கொன்ற மகன்
சுவிட்சர்லாந்தில் சொந்த தாயாரை சமையல் கத்தியால் கொடூரமாக கொலை செய்த இளைஞருக்கு உளவியல் சிகிச்சைக்கு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் Emmenbrücke பகுதியில் சமையலறை கத்தியால் பெண் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டார். பொலிசாருக்கு கிடைத்த தகவலில் குறித்த 59 வயது பெண்ணின் 21 வயது மகனே கொலை செய்துள்ளது தெரிய வந்தது.
கொலைக்கு பின்னர் பொலிசாரை தொடர்பு கொண்ட அந்த இளைஞர், தாம் தாயாரை கொன்றதாக தொலைபேசியில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றியதுடன், இளைஞரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கில் விசாரணையை முன்னெடுத்த பொலிசாருக்கு குறித்த இளைஞர் முழு ஒத்துழைப்பு அளித்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், காதில் கேட்ட அசரீரி காரணமாகவே, தாயாரை கொலை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 48 முறை கத்தியால் தாக்கப்பட்ட நிலையில், சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார் அந்த தாயார். உளவியல் தொடர்பான பிரச்சனை காரணமாகவே குறித்த இளைஞர் அந்த கொடூர கொலையை செய்துள்ளதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு உளவியல் சிகிச்சைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.