பிரித்தானியாவில் இரவு விடுதியில் 30 வயது நபர் கொலை!
பிரித்தானியாவில் இரவு விடுதி ஒன்றில் நபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 7 பேர் காயமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரவு விடுதியில் நடந்த கொலை
கார்ன்வாலில் உள்ள விக்டோரியா சதுக்கத்தில் அமைந்துள்ள Eclipse இரவு விடுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் அறிந்து பொலிஸார் அங்கு விரைந்தனர்.
அங்கு 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்திருந்தார். மேலும் ஆண், பெண் என 7 பேர் கத்தியால் தாக்கப்பட்டதால் காயமடைந்திருந்தனர்.
அவர்களை மீட்ட பொலிஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், சந்தேகத்தின் பேரில் 24 வயது நபரை கைது செய்தனர்.
பொலிஸார் விசாரணை
இச்சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி கூறுகையில், 'நேற்று இரவு போட்மினில் நடந்த ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து, 30 வயதுடைய ஒருவர் இறந்துவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் அதிகாரிகள் அவரது உறவினர்களுக்கு ஆதரவாக உள்ளனர்.
நாங்கள் இதை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட விடயமாக கருதுகிறோம். இந்த சம்பவம் தொடர்பாக வேறு யாரையும் நாங்கள் தேடவில்லை' என தெரிவித்துள்ளார்.
Image: Getty Images/fStop