கனடாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நால்வர் கொலை வழக்கு... குற்றவாளிக்கு 5 ஆயுள் தண்டனை
கனடாவின் லண்டனில் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த நால்வரை வாகனம் மோதி கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 5 ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இஸ்லாமிய குடும்பத்தினர் நால்வர்
கடந்த 2021 ஜூன் மாதம் Nathaniel Veltman என்பவர் தமது வாகனத்தால் மோதி இஸ்லாமிய குடும்பத்தினர் நால்வர் இறப்புக்கு காரணமானதுடன், சிறுவன் ஒருவர் படுகாயத்துடன் தப்பினார்.
@getty
இந்த வழக்கின் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் Nathaniel Veltman மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, அவர் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்தது.
23 வயதான Nathaniel Veltman மீது நான்கு முதல்நிலை கொலை வழக்கும், ஒரு கொலை முயற்சி வழக்கும் பதியப்பட்டிருந்தது. சம்பவத்தன்று, ஜூன் மாதம் 6ம் திகதி பாகிஸ்தான் வம்சாவளி அப்சால் குடும்பம் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.
Credit: Daryl Newcombe
இந்த நிலையில் லொறியில் கடந்து சென்ற Nathaniel Veltman, அவர்கள் மீது வேண்டும் என்றே மோதியுள்ளார். இதில் 74 வயது Talat Afzaal, 46 வயது மகன், இவரது மனைவி 44 வயது Madiha, இந்த தம்பதியின் 15 வயது மகள் Yumnah ஆகியோர் கொல்லப்பட்டனர்.
திட்டமிட்ட நடவடிக்கை
அப்போது 9 வயதான இவர்களின் மகன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். Nathaniel Veltman-ன் நடவடிக்கை ஒரு தீவிரவாத செயல் என்றே நீதிமன்றம் கருதுவதாக நீதிபதி Renee Pomerance அறிவித்துள்ளார்.
இதனையடுத்து 5 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், முதல்நிலை கொலை வழக்கு குற்றவாளி என்பதால் அவர் கைதான நாளில் இருந்து 25 ஆண்டுகளுக்கு பிணையில் வெளிவரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
@afp
ஒரு இன மக்கள் மீதான திட்டமிட்ட நடவடிக்கை இதுவென கருதுவதாக குறிப்பிட்ட நீதிபதி, குற்றவாளியின் பெயரை குறிப்பிட தாம் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
குற்றவாளி தாம் ஒரு தேசியவாதி, இனவாதி என்பதை உறுதி செய்துள்ளதாகவும், அதனாலையே, குற்றவாளியின் நடவடிக்கை பயங்கரவாத நடவடிக்கையாக கருதப்படுவதாக நீதிபதி Renee Pomerance குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |